வெளியாகியுள்ள க.பொ.த உ/த பரீட்சை பெறுபேறுகளின் படி கணிதப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் காலி ரிச்மன்ட் கல்லூரியைச் சேர்ந்த அதித்த வீரசிறி டயஸ் என்பவர் முதலிடம் பெற்றுள்ளார்.
விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் எஹலியகொட மத்திய மகா வித்தியாலய மாணவி அமாயா மஹதந்தில என்பவர் முதலிடம் பெற்றுள்ளார்.
கலைப் பிரிவில் கொழும்பு தேவி பாலிகா வித்தியாலய மாணவி மெத்சரணி லொக்குகே, அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.
இதேவேளை எரந்தி காஞ்சனா என்ற மாணவி வரத்தகப் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் கம்பஹா இரத்னாவலி பாலிகா வித்தியாலயத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.





