பல சவால்களுக்கு இடையே வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் பட்ஜெட் நிறைவேறியது!!

652

Budgetஇலங்கையின் உள்ளுராட்சி மன்றங்களில் 2014 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்கள் பல தோல்வியடைந்து சபைகளின் ஆட்சி அதிகாரம் ஆட்டம் காணும் நிலையில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எந்த எதிர்ப்பும் இன்றி சபை உறுப்பினர்களின் முழுமையான ஆதரவுடன் நேற்று நிறைவேறியது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டின் கீழுள்ள வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபைக்குரிய 2014 ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவுத் திட்டத்திற்கான இறுதி விவாதம் நேற்றைய தினம் பிரதேசசபை மாநாட்டு மண்டபத்தில் பிரதேசசபைத் தலைவர் க.சிவலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இவ் விவாதத்தின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் 7 பேரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 3 எதிர்கட்சி உறுப்பினர்களும் ஆக 10 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

அவர்கள் 2014 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் சிறப்பானதாகவும் மக்களுக்கு நன்மை பயப்பதாகவும் உள்ளதாக தெரிவித்து வாக்கெடுப்புக்கு விடாமல் ஏகமனதாக நிறைவேற்றினர்.