உயர்தர பரீட்சையில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் மாணவிகள் சாதனை!!

824

AL-examவெளியாகியுள்ள உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வவுனியாமாவட்டத்தில் முதல் பத்து இடங்களில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் மாணவிகள் 8 இடங்களை தமதாக்கியுள்ளதாக பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி திரேசம்மா சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்..

பெறுபேறுக்ளின் அடிப்படையில் தாட்சாயினி சிவமைந்தன் என்ற மாணவி வவுனியா மாவட்ட ரீதியில் முதலாமிடத்தினை பெற்றுள்ளதுடன் தேசிய ரீதியில் 23 ஆம் இடத்தினை பெற்று மருத்துவபீடத்திற்கு தெரிவாகியுள்ளதுடன் அபிராமி பாலச்சந்திரன் மாவட்ட ரீதியில் இரண்டாமிடத்தினையும் பிரமிளா விஸ்வநாதன் நான்காமிடத்தினையும் ஆங்கில மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றிய லக்சி மகாதேவன் ஐந்தாவது இடத்தினையும் தனுசா தெய்வேந்திரன் ஆறாவது இடத்தினையும் கஜேந்தினி கனகசெல்வராசா ஏழாவது இடத்தினையும் பவித்திரா செந்தில்குமார் எட்டாவது இடத்தினையும் சம்பிக்தா மகேந்திரன் ஒன்பதாவது இடத்தினையும் மாவட்ட மட்டத்தில் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இதேவேளை கணித பிரிவில் ஆரணி பாலச்சந்திரன் மற்றும் காயத்திரி விநாயகமூர்த்தி ஆகியோர் மாவட்ட மட்டத்தில் முறையே 5 ஆம் மற்றும் 7 ஆம் இடங்களை பெற்றுள்ளனர்.

அத்துடன் வர்த்தக பிரிவில் துசானி பத்மநாதன் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும் பியூலா கணேசன் 8 ஆம் இடத்தினையும் ஆங்கில மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றிய கஸ்தூரி செந்திரன் 8 ஆம் இடத்தினையும் சிவதர்சிகா பாலசுந்தரம் 9 ஆம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.

இது எமது பாடசாலையின் சிறந்த பெறுபேறாக கருதுவதாகவும் அம் மாணவிகளை வாழ்துத்துவதுடன் சித்தியடைந்த அனைத்து மாணவிகளுக்கும் தமது வாழ்த்துக்களையும் தெரிவத்தார்.

இதேவேளை வவுனியா மத்திய மகாவித்தியாலய அதிபர் எம். எஸ்.பத்மநாதன் கருத்து தெரிவிக்கையில்…

கணித பிரிவில் 2 மாணவர்கள் அதி விசேட தரத்தில் சித்தியடைந்துள்ளதுடன் 8 மாணவர்கள் பொறியில் பீடத்திற்கு தகுதி பெற்றுள்ளதாகவும் மருத்துவ பீடத்திற்கு மூன்று மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர் என தெரிவித்ததுடன் கலைப்பிரிவு மற்றும் வர்த்தக பிரிவுகளிலும் பல மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கான தகுதிகளை பெற்றுள்ளனர் என தெரிவித்தார்.