மரியாதை என்ற பெயரில் மண்டேலாவை அவமானப்படுத்திய போஸ்டர்!!

535

mandela_posterகோயம்புத்தூரில் மண்டேலாவிற்கு மரியாதை செலுத்தும் போஸ்டரில் நடிகர் மோர்கன் ப்ரீ மேன் புகைப்படத்தை நிறுவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தென் ஆபிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா டிசம்பர் 5ம் திகதி மரணம் அடைந்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் சந்திரசேகர் என்பவர் நெல்சன் மண்டேலாவிற்கு போஸ்டர் நிறுவியுள்ளார்.

அதில் நெல்சன் மண்டேலாவிற்கு பதில் நடிகர் மோர்கன் ப்ரீமேனின் புகைப்படம் தவறாக அச்சடிக்கப்பட்டது. இதை சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் விட்டதால் இச்செய்தி உலகம் முழுவதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோர்கன் ப்ரீமேன் இன்விக்டஸ் என்ற படத்தில் நெல்சன் மண்டேலாவாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.