சிறப்பான முறையில் செயல்பட்டு டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடிப்பதே இலக்கு என அவுஸ்திரேலிய அணியின் அணித்தலைவர் கிளார்க் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரில் பங்கேற்று வருகிறது. இத்தொடரை 3-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா கைப்பற்றி தொடரை வென்றது.
இதுகுறித்து அணித்தலைவர் கிளார்க் கூறுகையில், ஆஷஸ் தொடரை கைப்பற்றியதற்கு மேஜிக் ஒன்றும் செய்யவில்லை.
எங்கள் வீரர்களின் கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு இது, இதற்காக ஒவ்வொரு நபரையும் பாராட்ட வேண்டும்.
இத்தொடரை வட்சன் மந்தமாக தொடக்கினாலும் மூன்றாவது டெஸ்டில் சதம் கடந்து அசத்தினார். இவர் இளம் வீரர்களுக்கு நல்ல உதாரணமாக திகழ்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வெற்றியை தொடர்ந்து டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்திற்கு வருவதே லட்சியம் என்றும் தெரிவித்துள்ளார்.





