13 என்ற திகதி ராசியற்றது என்பது பிரான்ஸ் நாட்டின் மூதாட்டி ஒருவரின் விடயத்தில் நிரூபணமாகியுள்ளது.
பிரான்ஸின் அல்சால் பகுதியை சேர்ந்த மூதாட்டி(60) ஒருவர் வாரந்தோரும் தேசிய லொட்டரியில் சூப்பர் லோட்டோ என்ற டிக்கெட்டுகளை தவறாமல் வாங்கி விளையாடுவது வழக்கம்.
ஆனால் அவர் டிசம்பர் 13ம் திகதியில் சூப்பர் லோட்டோ பரிசு தொகை 16 மில்லியன் யூரோக்கள் என்றிருந்ததால் அதை வாங்காமல், வழக்கத்திற்கு மாறாக 43 மில்லியன் யூரோக்கள் பரிசு தொகையை கொண்ட “யூரோ மில்லியன்” என்ற லொட்டரி டிக்கெட்டை வாங்கி விளையாடினார்.
இதனைதொடர்ந்து அவரின் லொட்டரி எண் 1-6-16-32-41-1 அவருக்கு துரதிஷ்டத்தையே அளித்தது. ஏனெனில் இதே எண்களை கொண்ட “சூப்பர் லோட்டோ”என்ற லொட்டரி நிறுவனம் பரிசு பெற்ற வெற்றியாளராக வெறொறு நபரை அறிவித்தது.
எனவே வழக்கத்திற்கு மாறாக டிக்கெட்டுகளை மாற்றி வாங்கியது இவருக்கு ஏமாற்றத்தை அளித்தது.
மேலும் 13ம் திகதி வெள்ளிக்கிழமை நாளன்று இந்நிகழ்வு நேர்ந்ததால் அந்நாள் அதிர்ஷ்டமில்லாதது என்ற அவர்களின் நம்பிக்கை மீண்டும் முறை நிஜமானது.




