வவுனியாவில் சமூர்த்தி உத்தியோகத்தரை மாற்றக்கோரி அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு!!

965

மகஜர் கையளிப்பு

வவுனியா பண்டாரிகுளம் பகுதியை சேர்ந்த சமூர்த்தி உத்தியோகத்தரை மாற்றித் தருமாறு கோரி மாவட்ட அரசாங்க அதிபர் எம்.ஐ. ஹனீபாவிடம் மகஜர் ஒன்று இன்று (03.06) கையளிக்கப்பட்டது.

பண்டாரிகுளம் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட சமூர்த்தி பயனாளிகள் தங்கள் கிராமத்தின் சமூர்த்தி உத்தியோகத்தர் பக்கசார்பாக நடந்துகொள்வதாகவும், சமூர்த்தி பயனாளிகளை மரியாதை குறைவாக நடாத்துவதாகவும் தெரிவித்து வவுனியா மாவட்ட அரச அதிபரிடம் மகஜர் ஒன்றை கையளித்திருந்தனர்.

மகஜரை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தையடுத்து சமூர்த்தி பயனாளிகள் கலைந்து சென்றனர்.