அனைத்து முஸ்லீம் அமைச்சர்களும் கூட்டாக அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகினர்!!

361

முஸ்லீம் அமைச்சர்கள்

அலரி மாளிகையில் தற்போது நடைபெறும் விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே மேற்படி அறிவிப்பை அமைச்சர் ரவூப் ஹக்கீம் வெளியிட்டார்.



அரசாங்கத்தில் வகிக்கும் அமைச்சர் பதவிகளை அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் உதறியுள்ளனர். முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தனர்.

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசில் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு, இராஜாங்க அமைச்சு மற்றும் பிரதியமைச்சு பதவிகளை வகித்த முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.

நான்கு அமைச்சர்கள், நான்கு இராஜாங்க அமைச்சர்கள், ஒரு பிரதியமைச்சர் என ஒன்பது முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது அமைச்சுப் பதவிகளைத் துறப்பதாக அறிவித்தனர்.

அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியுதீன், எம்.எச்.ஏ.ஹலீம், கபீர் ஹாசீம் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் எச்.எம்.எம். ஹரீஸ், அலிசாஹீர் மௌலானா, பைசல் காசீம், அமீர் அலி ஆகியோர் பதவி துறந்தனர்.