தேவ்யானி வழக்கில் மன்னிப்போ, வாபஸோ கிடையாது அமெரிக்கா அதிரடி!

476

Devyaniஅமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவ்யானி கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவர் மீது அமெரிக்காவில் பதிவு செய்துள்ள விசா முறைகேட்டு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் மேலும் மிகவும் மோசமான முறையில் அவர் நடத்தப்பட்டதற்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேரிஹார்ப் கூறுகையில், தேவ்யானி மீதான வழக்கை திரும்ப பெறும் வாய்ப்பு இல்லை. அவர் மீதான குற்றச்சாட்டுகளை மிக தீவிரமானதாக கருதுகிறோம்.

மேலும் இது ஒரு சட்ட அமுலாக்க பிரச்சனை, இவரது வழக்கு தொடர்பாக ஆஜராக இந்தியாவில் இருந்து ஒரு வழக்கறிஞரை அனுப்ப இந்திய அரசு முன் வந்தது, ஆனால் தேவ்யானி அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் இந்த விவகாரத்தில் மன்னிப்பு எதுவும் கோரப்போவதில்லை எனவும் கூறியுள்ளார்.