விரைவில் திருமணம் செய்து கொள்வுள்ள திரிஷா!!

468

Trishaநடிகை திரிஷா திருமணத்துக்கு தயாராகிறார். அவருக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன. திரிஷா சினிமாவுக்கு வந்து பத்து ஆண்டுகள் தாண்டுகிறது. இன்னும் கதாநாயகியாகவே நடித்துக் கொண்டு இருக்கிறார்.

ஜீவா ஜோடியாக நடித்த என்றென்றும் புன்னகை படம் நேற்று ரிலீசானது. கன்னடத்தில் புனித்ராஜ் குமார் ஜோடியாக புதுப்படம் ஒன்றில் நடிக்கிறார். திரிஷா அளித்த பேட்டி வருமாறு..

நான் நடித்த எல்லா படங்களும் எனக்கு முக்கியமான படங்கள். என்றென்றும் புன்னகை படம் ஸ்பெஷல் ஆன ஒன்று. இதில் பக்கத்து வீட்டு பெண் மாதிரி எளிமையான கரக்டரில் நடித்துள்ளேன். வலுவான வேடத்தில் வருகிறேன். என் பாத்திரத்தை இயக்குனர் அகமது சிறப்பாக கொண்டு வந்துள்ளார். காமெடி படங்களில் நடிக்க எனக்கு விருப்பமாக உள்ளது. அது போன்ற கரக்டர்களில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கும்.

நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன். என்றென்றும் புன்னகை படத்தில் ஜீவாவுடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பும் ஜாலியாக இருந்தது. எனக்கு விரைவில் திருமணம் நடக்குமா என்று கேட்கிறார்கள். நான் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். வாழ்க்கையை முக்கியமான ஒருவருடன் பகிர்ந்து கொள்வது இனிமையானது என்று திரிஷா கூறினார்.