வவுனியா பேருந்து விபத்தில் ஒருவர் பலி சிறுவர்கள் உட்பட 19 பேர் காயம்!!

474

1வவுனியா புளியங்குளம் பகுதியியல் நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற  பேருந்து விபத்தொன்றில் ஒருவர் பலியானதுடன் 19 பேர் படுகாயமடைந்துள்ளனர் .

அனுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்ற பேருந்தொன்றே புளியங்குளம் பகுதியில் வீதியை விட்டு விலகி சரிந்ததில் ஸ்தலத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

25 பேர் இப் பேருந்தில் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் அனுராதபுரத்தை சேர்ந்த 48 வயதுடைய அஜந்த என்பவரே பலியாகியுள்ளார்.

இதேவேளை சிறுவர்கள் உட்பட ஆறுபேர் படுகாயமடைந்தும் ஏனையவர்கள் சிறு காயங்களுக்குள்ளாகிய நிலையிலும் வவுனியா வைத்தியசாலையின் விபத்துக்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.