பரபரப்பான போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை வெற்றி!!

543

SL1இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்றுள்ளது.

டுபாயில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தது. அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 284 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் அகமட் செஹாட் 124 ஓட்டங்களையும் மிஸ்பா உல் ஹக் ஆட்டமிழக்காது 59 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணியின் பந்து வீச்சில் குலசேகர, மலிங்க மற்றும் சீக்குகே பிரசன்ன ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

தொடர்ந்து 284 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 49.4 ஓவர்களில் 287 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் டில்சான் 40, குமார் சங்கக்கார 58, சந்திமால் 44, குலசேகர 32 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என சமநிலையில் உள்ளது.