யாழ்.கடையொன்றில் பணிஸிற்குள் அட்டையையும் சேர்த்து விற்பனை!!

956

bunபணிஸிற்கு அட்டையை வைத்து தயாரித்த செய்த தனியார் வெதுப்பகாரர் ஒருவருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் நேற்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுன்னாகம் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உள்ள கடையென்றில் நேற்றுக் காலை பணிஸ் வாங்கிய பெண்ணொருவர் வீட்டில் கொண்டு சென்று அதனை சாப்பிட முயன்றபோது அங்கு அட்டையென்று இருப்பதைக் கண்டுள்ளார்.

அதனோடு நிற்காத அவர் பிரதேச சபைக்கு அட்டை பணிசுடன் சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து குறித்த பணிஸை உற்பத்தி செய்த வெதுப்பகத்திற்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.

அட்டை பணிஸ் கதை சுன்னாகம் பகுதியில் பெரும் பரபரப்பு உண்டாக்கியது என்பதோடு, இந்த வழக்கு தாக்கல் நடவடிக்கை ஒரு நாளில் நிறைவு பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.