வவுனியா நெளுக்குளத்தில் வயலிலிருந்து முதியவர் சடலமாக மீட்பு!!(படங்கள்)

726

வவுனியா, மன்னார் வீதியில் நெளுக்குளம் பகுதியிலுள்ள வயலில் இருந்து வயோதிபர் ஒருவரின் சடலத்தினை இன்று காலை வவுனியா பொலிசார் மீட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று மதியம் தனது வயலுக்குச் சென்ற இராமன் சின்னையா (67) என்பவர் இராவாகியும் வீடு திரும்பாமையால் அவரைத் தேடிய பொழுது, அவர் வயல் வாய்க்கால் கரையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து வவுனியா பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதன் பின்னதாக இன்று காலை சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இம் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

1

2