வவுனியாவில் வறுமையற்ற இலங்கையை உருவாக்க சமுர்த்தி நிவாரண உரித்துப் படிவம் வழங்கும் நிகழ்வு!!

13


சமுர்த்தி நிவாரண உரித்துப் படிவம் வழங்கும் நிகழ்வு


வறுமையற்ற இலங்கையை உருவாக்குவோம் என்னும் தொனிப்பொருளில் வவுனியாவில் சமுர்த்தி நிவாரண உரித்து படிவம் வழங்கும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.மாவட்ட அரச அதிபர் எம்.ஹனீபா தலைமையில் நகரசபை மைதானத்தில் நேற்று மாலை ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே மற்றும் முன்னாள் அமைச்சரும் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் ஆகியோரினால் குறித்த சமுர்த்தி நிவாரண உரித்து பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.


இதன்போது, வவுனியா மாவட்டத்தில் கிராம சேவையாளர் பிரிவு ஒன்றில் 60 பேர் வீதம் 42 கிராம சேவையாளர் பிரிவிலிருந்து 2520 பேருக்கு புதிய முத்திரை வழங்கப்பட்டது. அத்துடன் பயனாளுக்கு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.


சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள மாவட்ட பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பயனாளிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.