எப்போதும் தன்னம்பிக்கையான மன நிலையுடன் மைக்கல் கிளார்க் காணப்பட்டாலும் அவரிடம் ஒரு எதார்த்தவாதி ஒளிந்திருக்கிறார்.
ஆம் இந்த ஆஷஸ் தொடரை தோற்றிருந்தால் தனது இடமும், தலைமைப் பதவியும் பெரும் கேள்விக்குறியாகியிருக்கும் என்று அவர் மனம் திறந்து அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் எதார்த்த நிலையை எடுத்தியம்பியுள்ளார்.
இங்கிலாந்து சென்ற போது மிகவும் மோசமான ஆஸி. அணி ஆஷஸ் தொடருக்கு வந்துள்ளது என்று வர்ணிக்கப்பட்டது. தற்போது 3- 0 என்று வென்றவுடன் இதுதான் சிறந்த ஆஷஸ் தொடர் வெற்றி என்று கூறப்படுகிறது”
நான் மிகவும் விரிவான முறையில் தன்னம்பிக்கை மிக்கவன் ஆனால் அதேவேளையில் ஒரு எதார்த்தவாதியும் கூட. அவுஸ்திரேலியாவில் ஆஷஸ் தொடரை இந்த முறை தோற்றிருந்தால் நிச்சயம் எனது தலைமைப் பதவி பறிபோயிருக்கும்.
நான் விளைவுகளுக்கு தயாராக இருக்கவேண்டியதுதான் என்பது எனக்குத் தெரியும். ரிக்கி பொண்டிங் ஆட்டத்திலிருந்து சிறிது இடைவெளி கொடுப்பார், அப்போதுதான் அவர் புத்துணர்வுடன் இருக்க முடியும் என்பார் ஆனால் நான் மேலும் மேலும் கடின உழைப்பைப் போட்டால்தான் நீடிக்க முடியும் என்று நம்புகிறவன்.
முடிவுகள் நமக்கு சாதகமாக இல்லாதபோது நாம் நம் திறமை மீதான நம்பிக்கையை இழந்து விடக்கூடாது. முழுத் திறமையையும் வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தால் நிச்சயம் விஷயங்கள் அப்படியே தலைகிழாக மாறும் என்பதில் எனக்கு தீவிர நம்பிக்கை இருக்கிறது.
அணி தோற்கும்போது குற்றச்சாட்டுக்களை தலைவர் பொறுப்பேற்கவேண்டும், வெற்றி பெறும்போது சுய தம்பட்டம் அடித்துக் கொள்ளக்கூடாது, வெற்றியை அணியின் பெருமையாக மாற்றிவிடவேண்டும் அப்படித்தான் இருக்கவேண்டும்.
இப்போது அணியில் இருப்பவர்கள் அனைவரும் ஆஷஸ் தொடரை வெல்வது என்றால் என்ன என்பதை அறியாதவர்கள், அவர்களுடன் நான் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. என்றார் கிளார்க்.





