நடுவானத்திலும் இனிமேல் மடிக் கணணியை பயன்படுத்தலாம்!!

331

Lapஐரோப்பாவில் இனிமேல் விமானங்களில் பயணிக்கும் போது மின்னணு சாதனங்களை பயன்படுத்தலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுநாள் வரையிலும் விமானப் பயணங்களில், பயணிகள் மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டு வந்தது.

ஏனெனில் இத்தகைய பயன்பாடுகள் விமானத்தின் தொழில்நுட்பங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்பது தான் இதற்குக் காரணம்.

இந்நிலையில் தற்போது முதன்முறையாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் தங்களது ஐரோப்பியப் பயணங்களில் இந்தத் தடைகளை நேற்று முதல் நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் விமானப் போக்குவரத்து கழகத்தைத் தொடர்ந்து, ஐரோப்பிய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனமும் படிப்படியாகத் தங்களின் பயணிகளுக்கு மின்னணு கருவிகளின் பயன்பாட்டை அதிகரித்துக் கொள்ளும் வசதியை அளிக்குமாறு தெரிவித்துள்ளது.

விமானப் பாதுகாப்பு குறித்த பயமின்றி பயணிகள் தங்களின் மடிக் கணணி, ஸ்மார்ட்போன் போன்ற மின்னணு சாதனங்களை உபயோகிக்கலாம் என்பது வரவேற்கத்தக்க விஷயமாகும் என்று ஐரோப்பிய விமானப் பாதுகாப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பேட்ரிக் கை தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இதுகுறித்து இறுதியான முடிவை எடுக்கவில்லை, இவற்றின் முடிவுகள் இங்கிலாந்தின் விமான போக்குவரத்து துறையால் அறிவிக்கப்பட வேண்டும்.