குழந்தையுடன் காணாமல் போன பெண் : மக்களின் உதவியை நாடும் பொலிசார்!!

573

woman_babyகனடாவில் கடந்த சில நாட்களுக்கு முன் குழந்தை ஒன்றுடன் காணாமல் போன பெண்ணை பொலிசார் தேடி வருகின்றனர்.

கனடாவில் ரொறண்ரோவில் கடந்த 17ம் திகதி முதல் பச்சிளம் குழந்தை ஒன்றுடன் Christina Lynn Potter என்ற பெண் காணாமல் போயுள்ளார்.

இவரின் வயது 30 எனவும், பெண் குழந்தை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கடைசியாக 17ம் திகதி இரவு 9:30 மணிக்கு Eglinton Avenue East / Markham Road பகுதியில் காணப்பட்டிருக்கின்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களை பொலிசார் தொடர்ந்து தேடி வருவதுடன் அவர்களைக் கண்டுபிடிப்பதற்குப் பொதுமக்களின் உதவியையும் பொலிசார் கோரியிருக்கின்றனர்.