ரகசிய சான்டாவாக வந்த பில்கேட்ஸ்!!

667

Billஅமெரிக்காவில் ரகசிய சான்டா நிகழ்ச்சியில் பெண் ஒருவரின் சான்டாவாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் வந்ததால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அமெரிக்காவில் ரகசிய சான்டா நிகழ்ச்சியை ரெட்டிட் என்ற இணையத்தளம் நடத்தியது.
இதில் பலரும் கலந்து கொண்டு பரிசுகளை பரிமாறிக் கொண்டனர்.

இந்நிகழ்வில் பில்கேட்சும் கலந்து கொண்டதாக அவரது செய்தித் தொடர்பாளர் ஜான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரேச்சல் என்ற பெண் தனது பிளாக்கில் கூறியிருப்பதாவது, எனது ரகசிய சான்டா பில்கேட்ஸ் என்பதை அறிந்து அதிசயித்தேன். அவர் எனக்கு ஒரு பசுமாடு பொம்மை, கையெழுத்து போட்ட வாழ்த்து அட்டை, ஒரு புத்தகம் மற்றும் எனது பெயரில் ஹெய்ஃபர் இன்டர்நேஷனல் அமைப்புக்கு 500 அமெரிக்க டொலர் நன்கொடையாக வழங்கப்பட்டதன் ரசீது ஆகியவற்றை பரிசாக அளித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய பணக்காரர் தனக்கு ரகசிய சான்டாவாக வந்ததில் ரேச்சல் பெருமகிழ்ச்சியில் உள்ளார்.