அனுஷ்காவுக்கு போட்டியாக வரும் தமன்னா!!

660

Aniskaதமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமாகி படிக்காதவன், அயன், பையா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை தமன்னா. தற்போது வீரம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் பொங்கல் வெளியீடாக வெளிவர உள்ளது.

இந்நிலையில், ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கு, தமிழ் ஆகிய இருமொழிகளில் உருவாகி வரும் மகாபலி என்ற படத்தில் நடிக்க தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார். சரித்திர கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டு வரும் இந்த படத்தில் பிரபாஸ், அனுஷ்கா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவந்திகா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு ஒத்திகைகள் நடந்து வருகிறது. வரும் 23ம் திகதி முதல் அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை இதே பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர்.