யாழ்.நகரை அண்டிய தீவு ஒன்றில் பெருமளவு அபாயகரமான வெடிபொருட்கள் : தீவிர விசாரணையில் பொலிஸ்!!

2


அபாயகரமான வெடிபொருட்கள்


யாழ்.நகா் பகுதியை அண்டிய தீவு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு அபாயகரமான வெடிபொருட்களை படையினா் மற்றும் பொலிஸாா் இணைந்து மீட்டிருக்கின்றனா்.இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸாா் மற்றும் இராணுவத்தினா் இணைந்து இந்த சோதனை நடாத்தியிருந்தனா்.


இதன்போது மிக அபாயகரமான பெருந்தொகை வெடிபொருட்களை பொலிஸாா் மீட்டிருக்கின்றனா். இதனுள் டெட்டனேட்டா்கள், சீ-4 வெடி மருந்து மற்றும் பல வெடிமருந்துகள் பாதுகாப்பாக பொதி செய்யப்பட்டு புதைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருக்கின்றன.