தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் வவுனியாவில் நாளை!!

493

TNAதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் ஒன்று வவுனியாவில் இடம்பெறவுள்ளது. பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கான இந்த கூட்டம் நாளை செவ்வாய்கிழமை வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்த முக்கிய கூட்டமாக இது அமையும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் அத தெரணவிடம் தெரிவித்தார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு முதலமைச்சர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.