வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளது!!

563

busவட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, எதிர்வரும் 27 ஆம் திகதி வெள்ளிககிழமை முழுமையான சேவை புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக, சங்கத்தின் தலைவர் எஸ்.கெங்காதரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முலலைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கான சேவையில் ஈடுபடும் பேருந்துக்களே மேற்படி முழுநேர சேவை புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்.

கடந்த 5 ஆம் திகதி வியாழக்கிழமை முல்லைத்தீவு மாவட்த்தில் 5 மாவட்டங்களுக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் எம்மால் வழங்கப்பட்ட கோரிக்கையினை இதுவரை காலமும் வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் நடைமுறைப்படுத்தவோ அல்லது மாற்று நடவடிக்கை செய்வதற்போ ஏற்றபாடு செய்யவில்லை.

வவுனியாவில் இருந்து பரந்தன் ஊடாக பயணத்தினை மேற்கொள்ளும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டும், குறுந்தூர சேவையில் ஈடுபடும் உரிமையாளர்களின் நலனைக் கருத்திற் கொண்டும் கடந்த 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமையில் இருந்து வவுனியாவிலிருந்து பரநதன் ஊடாக சேவையில ஈடுபடும் பேருந்துக்கள் தமது சேவைகளை மாங்குளம் அல்லது நெடுங்கேணி ஊடாக மேற்கொள்ள வேணடும.

இதனை மீறி இப்பேருந்துக்கள் பரந்தன் ஊடாக சேவையில் ஈடுபட்டால் ஏனைய 4 மாவட்டத்தில் இருந்து பரந்தன் ஊடாக சேவையினை மேற்கொள்ளும் பேருந்துக்கள் அனைத்தும் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபடுவதாக முடிவெடுக்கப்பட்டது.

இம்முடிவினை வடமாகாண ஆளுநர், வடமாகாண போக்குவரத்து அமைச்சர், பிரதிப் பொலிஸ்மா அதிபர், தனியார் போக்குவரத்து அமைச்சர், கொழும்பு தேசிய போக்குவரத்து அணைக்குழு உட்பட 5 மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டது.

ஆனால் இன்று வரைக்கும் இவ்விடயம் தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் பெரும் பாதிப்புக்கள் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ளது.

இதனால் மீளவும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவடடங்களுக்கு இடையில் சேவையில ஈடுபடும் உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இச் சந்திப்பில் உரிமையாளர்களால் வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கமே அரசாங்க அதிபரோ எமக்கு எதுவித மாற்று நடவடிக்கையும மேற்கொள்ளததானால் எதிர்வரும் 27 ஆம் வெள்ளிக்கிழமை முழுநேர சேவை புறக்கணிப்பில் ஈடுபடுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.