வவுனியா விகாரைகளில் பொசன் போயா தினத்தினை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடுகள்!!

530

பொசன் போயா

வவுனியா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ போதி தக்சிணாராமய பௌத்த விகாரையில் விகாராதிபதி சியம்பலாகஸ்வெல விமல சாரநாயக்க தேரரின் தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. இதேபோன்று மடுக்கந்த விகாரையிலும் விசேட பூஜைகள் இடம்பெற்றன.

இந்த பூஜை வழிபாடுகளில் பௌத்தர்கள் மட்டுமன்றி மூவின மக்களும் கலந்து கொண்டதுடன், புத்தரிசி எடுத்து வந்து விகாரையில் தானமும் செய்தனர்.

அத்துடன் வன்னிக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா வழிகாட்டலில் 21 ஆவது மற்றும் 56 டிவிசன் இராணுவத்தினர் கலந்து கொண்டதுடன் மூன்று மாடுகளையும் காணிக்கையாக வழங்கியிருந்தனர். மேலும் வவுனியாவில் பொசன் கொண்டாட்டங்கள் பரவலாக இடம்பெற்றது.