இலங்கையில் சிறந்த கலைஞர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டுக்கான சிறந்த கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று கொழும்பு மகாவலி கலாச்சார நிலையத்தில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் சிறந்த கவிதைக்கான “காவிய பிரதீப” விருதினை வவுனியாவிலிருந்து மூவர் பெற்றுக்கொண்டனர்.
திரு.சு.வரதகுமார், திருமதி.சுகந்தினி மற்றும் திரு. அபிராம் ஆகிய மூவருமே இவ் விருதினை பெற்றுக்கொண்டனர்.
இன் நிகழ்வில் பல்வேறு துறையைச் சேர்ந்த கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.