உதவி இயக்குனர்களை கெட்ட வார்த்தையில் திட்டும் தனுஷ்!!

553

velai illa pattathariதனுஷின் வுண்டர்பார் நிறுவனம் வேலையில்லா பட்டதாரி படத்தை தயாரித்து வருகிறது. தனுஷ்தான் நாயகன் பொல்லாதவன், ஆடுகளம் படங்களின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் படத்தின் இயக்குனர்.

படப்பிடிப்பு தளத்தில் வேல்ராஜை ஓரமாக உட்கார வைத்து தனுஷ்தான் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் உதவி இயக்குனர்களாக இருப்பவர்களை தனுஷ் வேலை வாங்கும்விதம் பட யூனிட்டை முகம் சுழிக்க வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரியாதைக் குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவதும், சமயத்தில் கெட்ட வார்த்தைகளில் திட்டுவதுமாக தனது ஸ்டார் அந்தஸ்தை சாக்கடை தரத்திற்கு கீழிறக்கி நடந்து வருகிறார் தனுஷ்.

மற்ற தொழிலாளிகளை இப்படி கேவலமான வார்த்தைகளில் திட்டினாலோ, மரியாதைக் குறைவாக நடத்தினாலோ அவர்களின் சங்கங்கள் துணைக்கு வரும்.

ஆனால் உதவி இயக்குனர்கள், இயக்குனர்களின் தயவு இருந்தால் மட்டுமே ஒரு படத்தில் பணிபுரிய முடியும். இயக்குனர் நிராகரித்தால் அந்தப் படத்தில் பணிபுரிய இயலாது.

மற்ற உடலுழைப்பு தொழிலாளர்களைப் பொறுத்தவரை ஒருவர் எந்தப் படத்தில் பணிபுரிவது என்பதை பெரும்பாலும் சங்கங்களே தீர்மானிக்கின்றன.

உதவி இயக்குனர்கள் உறுப்பினர்களாக இருப்பதே இயக்குனர்கள் சங்கத்தில்தான். இப்படியொரு கையறு நிலையில் உதவி இயக்குனர்கள் இருப்பதால் நாயகன், நாயகி, இயக்குனர் என்று எல்லோரின் கோபத்தின் வடிகாலாக இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.