3 வயது மகனை 53வது மாடியிலிருந்து வீசி எறிந்த தந்தை தானும் தற்கொலை!!

677

jumpஅமெரிக்காவில் மூன்று வயது மகனை 52வது மாடியிலிருந்து தூக்கி எறிந்த தந்தை தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அமெரிக்காவின், புரூக்ளின் நகரில் வசித்தவர் திமித்ரி கனாரிக்கோவ் 35. இவருடைய மகன் கிரில் 3. மனைவியிடமிருந்து பிரிந்து வாழும் திமித்ரி மகனை தன் வசம் வைத்திருக்க நினைத்தார்.

இதற்கு அவர் மனைவி சம்மதிக்காததால் ஆத்திரத்தில் குழந்தையை 53வது மாடியிலிருந்து வீசி எறிந்தார்.
உடனடியாக திமித்ரியும் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

கீழ் தளத்தில் படுகாயமடைந்த நிலையில் இருந்த குழந்தை, வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தது.