இலங்கையில் தயாரிக்கப்பட்ட மிகப் பெரிய கப்பல் ஜப்பானிடம் கையளிப்பு!!

343

மிகப் பெரிய கப்பல்

இலங்கையில் வரலாற்றில் முதல் முறையாக தயாரிக்கப்பட்ட மிகப் பெரிய கப்பல் நேற்று ஜப்பானிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கப்பலை கையளிக்கும் நிகழ்வு பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் கொழும்பு துறைமுகத்தில் நடைபெற்றது.

கொழும்பு டொக் யார்ட் நிறுவனம் இந்த கப்பலை தயாரித்துள்ளது. இதன் நீளம் 113 மீற்றர். இந்த கப்பல் ஆழ்கடலில் அதிசக்தி வாய்ந்த கேபிள்( தொடர்பாடல் மற்றும் மின் விநியோகம்) பதித்தல், அவற்றை திருத்தம் செய்தல் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க, பிரதியமைச்சர் நளின் பண்டார ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.