வவுனியாவில் காணி உறுதிப்பத்திரம் வழங்குவதற்கான நடமாடும் சேவை!!

744

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பண்டாரிக்குளம் கிராம அலுவலர் பிரிவில் காணி உறுதிப் பத்திரங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நடமாடும் சேவை கிராம அலுவலர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.

வவுனியா, பண்டாரிக்குளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள பண்டாரிகுளம், உக்கிளாங்குளம் ஆகிய பகுதிகளில் காணி உறுதிப் பத்திரமின்றி வசித்து வந்த 57 பேருக்கு காணி உறுதிகளை வழங்குவதற்காகவே இக் காணி நடமாடும் சேவை இடம்பெற்றது.

இதில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி ச.பிரியதர்சினி, கிராம அலுவலர், காணி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இதேவேளை, இதில் தெரிவு செய்யப்படுபவர்களுக்கான காணி உறுதிகள் விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.