உணவுக்குழாய் இல்லாமலே பிறந்து முதன்முறையாக உணவை சுவைக்க போகும் குழந்தை!!

406

பஞ்சாப் மாநிலத்தில் உணவுக்குழாய் இல்லாமலே பிறந்த ஏஞ்சல் என்கிற குழந்தை முதன்முறையாக உணவை சுவைக்க உள்ளார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஏஞ்சல் என்கிற குழந்தை பிறக்கும் போதே உணவுக்குழாய் இல்லாமல் பிறந்துள்ளார்.

அவரது உடலுடன் வெளிப்புறமாக இணைக்கப்பட்ட செயற்கை குழாய் மூலமாகவே திரவ உணவு பெற்று வந்தார். மகளின் அறுவை சிகிச்சைக்காக அவருடைய தந்தை சொந்த வீட்டையே அடமானம் வைக்க தயாராகியிருந்தார். இதனை அறிந்த சமூகநல அமைப்புகள் பல தாமாக உதவ முன்வந்தன.

இந்த நிலையில் இரண்டரை வருடங்களுக்கு பின் முதன்முறையாக ஏஞ்சலிற்கு முழு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவருடைய மாமா பங்கஜ் கூறுகையில், ஏஞ்சல் மற்ற குழந்தைகள் போலவே இருக்க ஆசைப்பட்டாள். அவர்கள் உணவு சுவைப்பதை பார்த்துவிட்டு அடிக்கடி சமைலயறைக்கு ஓடிவருவாள்.

பலகட்ட அறுவைசிகிச்சைக்கு பின் முதன்முறையாக உணவை சுவைக்க இருக்கிறாள். அவளுடைய அறுவை சிகிச்சைக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.