வவுனியா சர்வோதயம் W.C.H திட்டத்தின் கீழ் கலைஞர் திரு.மாணிக்கம் ஜெகன் அவர்களின் நெறிப்படுத்தளின் கீழ் வவுனியா கற்குளம், கற்பகபுரம், தேக்கவத்தை ஆகிய கிராமங்களில மாணவர்கள் பாடசாலை இடைவிலகல் தொடர்பாணவிழ்ப்புனர்வு நாடகம் அரங்கேற்றப்பட்டது.
சர்வோதய நிறுவனம் இரண்டு வருடங்களாக சிறுவர்களின் கல்வியை மையப்படுத்தி மாலை நேர கல்வி, விளையாட்டுசிறுவர்களின் ஆக்கத்திறன் செயற்பாடுகள் போன்ற செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
அதன் தொடற்சியாக பாடசாலை செல்லாத மாணவர்களுக்கு விழிப்புனர்வு ஏற்படுத்தும் நோக்கோடு சிறப்பு நாடகம் கற்குளம், கற்பகபுரம், தேக்கவத்தை ஆகிய கிராமங்களில் மக்களின் ஆதரவுடன் மிகவும் சிறப்பாக அரங்கேறியது.
இந் நிகழ்வில் மாவட்ட இணைப்பாளர் சு.உதயகுமாரன், திட்ட உத்தியோகத்தர்களான கோ.ரூபகாந், சி.நந்தினி, நாடகஆசிரியர் திரு.மாணிக்கம் ஜெகன் அவர்களும் கலந்துகொண்டனர்.