அமரர் .பொன்னுத்துரை கலைநாதன்
நயினாதீவு 7 ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் 33, பெரியதம்பனை மற்றும் 28, கரப்பன்காடு, வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட உயர்திரு பொன்னுத்துரை கலைநாதன் கடந்த (24.06.2019) திங்கட்கிழமை அதிகாலை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற பொன்னுத்துரை மற்றும் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை மற்றும் சிவயோகம் தம்பதியினரின் அன்பு மருமகனும் வேதாரோகினியின் பாசமிகு கணவரும் கோகுலன் (பொது முகாமையாளர் , சண்முகம் ஸ்ரோர்ஸ், வவுனியா), அகல்யா (பிரான்ஸ்), ராகுலன் (வைத்தியர் – கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும் பத்மினி, கதிர்காமநாதன் (பிரான்ஸ்), சாம்பவி ( அபிவிருத்தி உத்தியோகத்தர், யாழ் போதனா வைத்தியசாலை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் அன்னலட்சுமி செல்வரெத்தினம் (கனடா), பாக்கியலட்சுமி சுந்தரலிங்கம் (கனடா), சச்சிதானந்தன் (மணியம்), நடராசா (குஞ்சுக்கிளி, சுவிஸ்) ஆகியோரின் அன்புச்சகோதரனும் ஹரிணி, அபர்நாத், ஹம்ரிஷ், ஹரிஜித், விசாகி, சங்கீத்மன், சபீஸ்மன், வாமணன், லயஸ்ருதி, சம்ஸ்கிரிதி, ராஜாதித்ததேவ் ஆகியோரின் அன்புப்பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (27.06.2019) வியாழக்கிழமை காலை 7.00 மணியளவில் கரப்பன்காடு வவுனியா இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக தச்சநாதன் குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்.