வலியால் தவித்தது போதும் : கைகள் இரண்டையும் துண்டிக்க மருத்துவரிடம் கெஞ்சிய இளைஞர்!!

742


வங்கதேச இளைஞர்



கைகள் இரண்டும் மரம் போன்று வளரும் அபூர்வ நோயால் தவிக்கும் வங்கதேச இளைஞர், தற்போது வலி தாங்கமுடியவில்லை எனக் கூறி தனது கைகள் இரண்டையும் துண்டித்து நீக்க மருத்துவர்களை நாடியுள்ளார்.



Treeman என அறியப்படும் வங்கதேசத்தின் 28 வயதான அபுல் பஜந்தருக்கு இதுவரை 25 அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது தன்னால் உயிர் பிரியும் வலியை தாங்கிக்கொள்ள முடியவில்லை எனக் கூறி தமது இரு கைகளையும் துண்டித்து நீக்க மருத்துவர்களை நாடியுள்ளார் பஜிந்தர்.




கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இதுவரை 25 அறுவைசிகிச்சைகள் மேற்கொண்டுள்ள நிலையில், ஒவ்வொரு முறையும் நோய் குணமானதாக மருத்துவர்களால் உறுதி அளித்தும், மீண்டும் மீண்டும் அந்த நோய் தாக்கம் பஜிந்தரை வாட்டி வந்துள்ளது.


இனிமேலும் இந்த வலியை தம்மால் தாங்கிக்கொள்ள முடியாது எனக் கூறும் பஜிந்தர், இரவு படுத்துறங்கி பல நாட்களானது எனவும், வலியால் உயிர் பிரிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கைகள் இருந்தும் தமக்கு பயனில்லை எனக் கூறும் பஜிந்தர், அதை துண்டித்து நீக்க மருத்துவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும்,

பஜிந்தரின் கோரிக்கைக்கு அவரது தாயார் ஆமினா பீபியும் ஆதரவு தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, மகன் வலியால் தவிப்பது தம்மால் கண்டிருக்க முடியவில்லை எனவும் ஆமினா கண்கலங்கியுள்ளார். வெளிநாட்டுக்கு சென்றால் உரிய சிகிச்சை பெறலாம் என கூறும் பஜிந்தர்,


ஆனால் தற்போதைய பொருளாதார சூழலில் அது சாத்தியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அரசின் உதவியுடன் தற்போது சிகிச்சை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், உலகில் அரை டசின் பேருக்கே இந்த விசித்திர நோய் தாக்கியுள்ளதாகவும், வங்கதேசத்தில் ஒரு பெண்ணுக்கு இந்த நோய் தாக்கியதாகவும், அதை மருத்துவர்கள் குணப்படுத்தியதாகவும் பஜிந்தர் தெரிவித்துள்ளார்.