வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி போதைப்பொருள் ஒழிப்பிற்காக வாகனப் பேரணி!!

1302

வவுனியா மாவட்ட செயலகத்திலிருந்து கிளிநொச்சி நகரினை நோக்கிய போதைப்பொருள் ஒழிப்பிற்காக வாகனப் பேரணி இன்று (25.06.2019) காலை 8.30 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்திலிருந்து ஆரம்பமானது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா தேசியக் கொடியினையேற்றி வைத்து வாகனப்பேரணியினை வைத்தார்.
ஜனாதிபதி செயலகம் மற்றும் ஆளுநர் அலுவலகத்தின் ஆலோசனைக்கமைய வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் ஆரம்பமான இவ் போதைப்பொருள் ஒழிப்பிற்கான வாகனப்பேரணி இன்று (25.06.2019) மதியம் கிளிநொச்சி நகரினை சென்றடையவுள்ளது.

இப் பேரணியில் வவுனியா மாவட்ட செயலகத்தின் கீழுள்ள அனைத்து திணைக்களங்களின் வாகனங்கள் மற்றும் பிரதேச செயலக வாகனங்கள் செல்கின்றன.