பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியில் முன்னாள் அணித்தலைவர் மகேல ஜெயவர்தனவுக்கு மீண்டும் இடம் கிடைத்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(யு.ஏ.இ) சென்றுள்ள பாகிஸ்தான்- இலங்கை அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றன.
வருகிற 31ம் திகதி முதல் டெஸ்ட் போட்டி அபுதாபியில் தொடங்குகிறது. இந்நிலையில் டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியில் முன்னாள் அணித்தலைவர் மகேல ஜெயவர்தன இடம் பெற்றுள்ளார்.
கடைசியாக இவர் கடந்த ஜனவரி மாதம் சிட்னியில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.





