இலங்கை கடற்படைக்கான பயிற்சியை கண்டித்து இந்திய கடற்படை அலுவலகம் முற்றுகை!!

818

imagesஇலங்கை கடற் படைக்கு பயிற்சி கொடுப்பதை கண்டித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நேற்று சென்னையில் உள்ள இந்திய கப்பற்படை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆனூர் ஜெகதீசன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின்போது பேசிய அவர்..

இலங்கையில் நடந்த போரின்போது இந்திய அரசு 2009ம் ஆண்டு இலங்கைக்கு ஆயுத உதவிகளை செய்து தமிழர்களுக்கு துரோகம் இழைத்தது.

இதனை ராஜபக்ஷவே வெளிப்படையாக விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு இந்தியா உதவி செய்யவில்லை. போரை நடத்தியதே இந்திய அரசுதான் என்று கூறினார்.

நேரு காலத்தில் இருந்தே தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம்தான் இழைத்து வருகிறது. இதில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும், பாஜக ஆட்சிக்கு வந்தாலும் இலங்கைக்கு போர் கப்பல் கொடுத்து உதவுகிறார்கள்.

இந்திய அரசு இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிப்பதை உடனே நிறுத்த வேண்டும். இல்லை என்றால் ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்றார்.

-நக்கீரன்-