தேவயானிக்காக துடிக்கும் இந்தியா இசைப்பிரியாவுக்காக துடிக்காதது ஏன் : கருணாநிதி!!

1012

karunaஅமெரிக்காவில் தேவயானி கைது செய்யப்பட்டபோது துடித்தவர்கள், இசைப்பிரியா கொல்லப்பட்டபோது துடிக்காதது ஏன் என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்..

அமெரிக்காவில் பணியாற்றி வந்த இந்தியத் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே கைது செய்யப்பட்டார். நாடாளுமன்றத்திலும், வெளியிலும் அந்தப் பிரச்னை அதிகமாகப் பேசப்பட்டு, இந்திய அரசு அதற்காக உடனடியாக நடவடிக்கை எடுத்தது பற்றியெல்லாம் தொடர்ந்து செய்திகள் வந்துகொண்டுள்ளன.

ஆனால் அந்த ஒரு இந்திய பெண்ணுக்காக அலறித் துடிக்கும் இந்திய அரசும் மத்திய அமைச்சர்களும் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவுக்கும் பாலச்சந்திரனுக்கும் மற்றும் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காகவும் துடிக்கவில்லையே என்ற ஆதங்கம்தான் எனக்கு அதிகமாக ஏற்படுகிறது.

தேவயானிக்காக வருந்துவதை நான் தவறு என்று கூறவில்லை. அதே நேரத்தில் இசைப்பிரியாவுக்காக ஏன் இந்தப் பாசம் வரவில்லை என்றுதான் வருந்துகிறேன்.