வவுனியா வைத்தியசாலையில் படையினரின் சோதனை நிறுத்தம் : பொலிசார் பாதுகாப்புக் கடமையில்!!

1347

வவுனியா வைத்தியசாலை

கொழும்பில் கடந்த ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற தற்கொலைத்தாக்குதல் காரணமாக நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் கேந்திர முக்கிய நிலையங்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை படையினர் பொலிசார் மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற அனாமதேய துண்டுப்பிரசுரத்தினால் வைத்தியசாலைக்கு பெருமளவு படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று நண்பகலுடன் படையினரின் பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து பொலிசார் சிவில் பாதுகாப்புப்பிரிவினருடன் இணைந்து பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நடைமுறை காரணமாக வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள், வைத்தியசாலையில் சிகிச்சை மேற்கொண்டு வருபவர்களுக்கு எடுத்துச் செல்லும் உணவுப்பொருட்கள் உட்பட அனைத்தையும் தீவிர சோதனைக்குப்பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

இதனால் வைத்தியசாலைக்கு செல்லும் உறவினர்கள் பெரும் நெருக்கடிகளையும், கெடுபிடிகளையும் எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.