வடமாகாண செயலாளருக்கு கொலை அச்சுறுத்தல் : ஆளுநர் தகவல்!!

1053

vijayaledsumyவடமாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸிற்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரிசிறி தெரிவித்துள்ளார்.

உள்ளூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து அச்சுறுத்தல் அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பதவியிலிருந்து விலகிக்கொள்ளுமாறே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து தொலைபேசி மூலம் மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் சில இலங்கையர்கள் அவரை உள ரீதியாக பலவீனப்படுத்தி பதவி விலகச் செய்ய முயற்சிக்கின்றனர்.

இது தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தொலைபேசி அழைப்பு மூலம் பதவியை துறக்கச் செய்ய அழுத்தம் கொடுப்பது நோக்கமாக அமைந்திருக்கலாம் என அவர் ஜி.ஏ. சந்திரிசிறி தெரிவித்துள்ளார்.