நாய்க்கு உணவு கொண்டு சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த பரிதாபம்!!

759

குடும்பஸ்தருக்கு நேர்ந்த பரிதாபம்

சீகிரிய – திபிஸ்ஸ பகுதியில் காட்டு யானைகள் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர். தக்காளி தோட்டத்தினை பன்றிகளிடமிருந்து பாதுகாப்பதற்கு காவலுக்காக கட்டப்பட்டிருந்த நாய்க்கு உணவு எடுத்துக்கொண்டு செல்லும் வேளையில், உணவு தேடி வந்த இரு யானைகள் குறித்த நபரை சுமார் அரை மணித்தியாலம் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சத்தமிட்டமையில் அருகிலுள்ளவர்கள் வருகை தந்து யானைகளை விரட்டியதுடன் காயமுற்ற நபரை சீகிரிய வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

சீகிரிய வைத்தியசாலையிலிருந்து தம்புள்ளை வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார். தம்புள்ளை வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லும் வழியிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார் என வைத்தியர்கள் அறிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.