19 கிலோ வெள்ளைச் சந்தனத்துடன் வெள்ளவத்தையில் ஒருவர் கைது!!

1084

sandalwoodவெள்ளைவத்தை பொலிஸ் பிரிவில் பொது சந்தை பகுதியில் வெள்ளைச் சந்தனத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் சட்டவிரோதமான முறையில் 19 கிலோ கிராம் வெள்ளைச் சந்தனத்தை தன் வசம் வைத்திருந்ததாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை கைது செய்யப்பட்ட நபர் வெள்ளவத்தை பகுதியை வசிப்பிடமாகக் கொண்டவர் என கூறப்படுகிறது. சந்தேகநபர் இன்று புதுக்கடை நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.