வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தில் இடம்பெறும் இந்து விழிப்புணர்வு முகாம்!!

700

hinduவவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தில் இலங்கை இந்து சுயம் சேவா சங்கம், இந்து விழிப்புணர்வு முகாமை நடாத்துகின்றது. நேற்று(24.12) ஆரம்பமான இன் நிகழ்வு தொடர்ந்து ஒரு வாரத்திற்கு நடைபெறவுள்ளது.

இந்தியாவிலிருந்து மதுரை வேதாந்த ஆனந்த சுவாமி அவர்கள் இம் முகாமை நடாத்துவதற்காக வருகைதந்துள்ளார். இம் முகாமில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் நேற்றைய நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இம் முகாமில்  பயிற்சி, யோகாசனம் மற்றும் ஆன்மிகம் தொடர்பான பல்வேறு பயிற்சிகள் இடம்பெற்றன.