இளம் வயது கர்ப்பிணிப் பெண்ணுக்கு நடந்தது என்ன : கதறி அழுத உறவினர்கள்!!

474

தமிழகத்தில் கர்ப்பிணி பெண் உயிரி ழந்த நிலையில் தவறான சிகிச்சையால் அவர் இறந்ததாக கூறி உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரியை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவர் மனைவி அபிராமி 9 மாத கர்ப்பமாக இருந்த நிலையில் மருத்துவமனை ஒன்றில் வழக்கமான சோதனைக்காக அவரது பெற்றோர் நேற்று இரவு அழைத்து வந்துள்ளனர்.

அப்போது சிகிச்சையில் இருந்த அபிராமிக்கு திடீரென உடல்நிலை மோசமானது. இதனால் தனியார் மருத்துவமனை நிர்வாகம் அவசர அவசரமாக ஆட்டோ ஒன்றில் ஏற்றி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அபிராமியை அனுப்பி வைத்துள்ளது.

அங்கிருந்த அரசு மருத்துவர்கள் அபிராமியை சோதித்து பார்த்ததில் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் இரவு முழுவதும் மருத்துவமனையில் சோகத்தில் மூழ்கி இருந்தனர்.

இந்நிலையில் தவறான சிகிச்சை அளித்ததால் தான் கர்ப்பிணி இறந்ததாக கூறி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு திடீரென உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கு வந்த பொலிசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து சாலை மறியலை கைவிட்டு உறவினர்கள் அங்கிருந்து சென்றார்கள்.