வவுனியாவில் வடகிழக்கு மாகாணங்களுக்கான வர்த்தக கைத்தொழில் சம்மேளன ஒன்றுகூடல்!!

820

கைத்தொழில் சம்மேளன ஒன்றுகூடல்

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்திற்கான ஒன்று கூடல் வவுனியா மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளன தலைவர் கே.அமிர்தலிங்கம் தலமையில் வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று (30.06.2019) காலை 9.30 மணி தொடக்கம் மதியம் 2.30 மணி வரை இடம்பெற்றது.

இவ் ஒன்றுகூடலின் போது வடக்கு மற்றும் கிழக்கில் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், எதிர்காலத்தில் எதிர்நோக்கும் சவால்கள், வடக்கு கிழக்கில் உள்ள வளங்கள், வியாபார விருத்தியினை எவ்வாறு மேற்கொள்ளுவது, பொருளாதார வீழ்ச்சியினை எவ்வாறு சீர் செய்வது போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

வடக்கு கிழக்கு சம்மேளன தலைவர் ரீ.குலதீபன் இவ் ஒன்றுகூடலின் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டிருந்ததுடன் இதில் வடக்கு கிழக்கு பகுதியினை சேர்ந்த வர்த்தக கைத்தொழில் சம்மேளத்தின் தலைவர்கள், உபதலைவர்கள், செயலாளர்கள், ஒருங்கினைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.