திரிஷாவை உற்சாகப்படுத்திய விடயம்!!

387

Trishaகன்னட சினிமாவில் அறிமுகமாகியுள்ள த்ரிஷா, ஜீவாவுக்கு ஜோடியாக நடித்துள்ள என்றென்றும் புன்னகை படம் வெளியான பிறகு திடீரென்று உற்சாகமாக காணப்படுகிறார். காரணம், அப்படத்தைப் பார்த்த அவரது அபிமான இயக்குனர்கள், ஹீரோக்கள் என்று பலர் அவருக்கு போன் போட்டு அவரது நடிப்பை பாராட்டினார்களாம்.

அதிலும், இன்னும அவர் இளமையை பராமரித்து வருவதை சுட்டிக்காட்டி வயதே தெரியவில்லை. இன்னும் பல ஆண்டுகளுக்கு சினிமாவில் ரவுண்டு கட்டலாம் என்றும் உசுப்பி விட்டுள்ளார்களாம்.

அதனால் இனி தமிழ், தெலுங்கில் தன்னை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நம்பிக்கை இல்லாமல் இருந்த த்ரிஷாவுக்கு தனது இளமையை புகழ்ந்தவர்கள் முன்னணி கலைஞர்கள் என்பதால் இன்னும் நமக்கு கோடம்பாக்கத்தில் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்று நம்பத் தொடங்கியிருக்கிறார்.

இதற்கிடையே ஜனவரியில் நடைபெறும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில், சென்னை ரைனோஸ் அணியின் விளம்பர தூதுவராக தன்னை தேர்ந்தெடுத்திருப்பதால் இரட்டிப்பு உற்சாகத்தில் இருக்கிறார் த்ரிஷா.

அதனால் இதுவரை தன்னை கண்டும் காணததும் போல் இருந்த இளவட்ட ஹீரோக்களுடன் நட்புறவை உறுதிப்படுத்தி வரும் அவர், போட்டி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் ஆர்வமாக கலந்து கொள்வதோடு சிலகாலம் தன்னிடம் டச் இல்லாமல் இருந்த ஹீரோக்களுடனான நட்பை மீண்டும் புதுப்பிக்கத் தொடங்கியிருக்கிறார் த்ரிஷா.