புத்தாண்டு நடனத்துக்கு தயாராகும் நடிகைகள்!!

315

actநடிகைகள் புத்தாண்டு நடனத்துக்கு தயாராகிறார்கள். இதற்காக பல லட்சம் ரூபாய் சம்பளமாக பேசியுள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டங்களில் நட்சத்திர ஹோட்டல்களில் நடிகைகளை நடனமாட வைத்து விருந்து சாப்பிடுவது பேஷனாகி விட்டது.

மும்பையில் இது பிரபலமாக உள்ளது. இந்தி நடிகர், நடிகைகள் புத்ததாண்டு நிகழ்ச்சிகளில் ஆடி கோடி கோடியாய் வாங்குகின்றனர். சில நடிகைகள் விருந்தில் மட்டும் கலந்து கொண்டு விட்டு போகிறார்கள். இதற்கும் பல லட்சம் வாங்குகிறார்கள். தற்போது இந்த கலாச்சாரம் ஆந்திரா மற்றும் தமிழகத்திலும் பரவி உள்ளது.

இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா சென்னை நட்சத்திர ஓட்டலில் 7 நிமிடம் நடனம் ஆடுகிறார். இதற்காக 6 கோடி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகை சார்மி தெலுங்கில் கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார். அவரை புத்தாண்டில் நடனம் ஆட வைக்க ஒரு ஹோட்டல் நிர்வாகம் 18 லட்சம் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளது.

ஸ்வேதாபாசு 7 லட்சத்துக்கு ஆடுகிறார். இருவரும் தமிழ் படங்களிலும் நடித்துள்ளனர். தமன்னா, காஜல் அகர்வால், அனுஷ்கா, ஹன்சிகா, சமந்தாவிடமும் புத்தாண்டு நடனம் ஆட பேச்சுவார்த்தை நடக்கிறது. அவர்கள் பெரும் தொகை கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.