கமல் ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலுக்கு 2 கோடி சம்பளம்!!

282

Kajalகமல் ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலுக்கு 2 கோடி சம்பளம் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் நயன்தாராவுக்கு இணையாக உயர்ந்துள்ளார். காஜல் அகர்வால் 2004ல் இந்திப் படமொன்றில் அறிமுகமானார்.

2008 வரை அவருக்கு பேசிக் கொள்ளும்படி படங்கள் அமையவில்லை. 2009ல் மகவீரா தெலுங்கு படத்தின் வெற்றி அவருக்கு பெரிய நட்சத்திர அந்தஸ்தை தந்தது. தமிழில் நான் மகான் அல்ல, துப்பாக்கி, மாற்றான், ஆல் இன் ஆல் அழகு ராஜா போன்ற படங்களில் நடித்தார். தற்போது விஜய் ஜோடியாக ஜில்லா படத்தில் நடித்து வருகிறார்.

லிங்கு சாமி தயாரிப்பில் கமல் நடிக்கும் உத்தம வில்லன் படத்துக்கு கதாநாயகி தேர்வு நடந்தது. அனுஷ்காவை பரிசீலித்தனர். ஆனால் அவர் தெலுங்கில் தயாராகும் இரண்டு சரித்திர படங்களில் பிசியாக நடிப்பதால் கால்ஷீட் இல்லை.

இதையடுத்து காஜல் அவர்வாலிடம் பேசினர். அவர் இளம் ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பேன் என்று கூறி வந்ததால் யோசித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து 2 கோடி சம்பளம் தருவதாக உறுதி அளிக்கப்பட்டதாகவும் இதையடுத்து உத்தமவில்லன் படத்தில் நடிக்க காஜல் அகர்வால் ஒப்புக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.