வவுனியா ஓமந்தைப் பகுதியில் குடும்பத் தகறாரு காரணமாக கணவன் ஒருவர் மனைவியினால் தீயிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
எஸ்.ஸ்ரீதரன் என்ற 51 வயது நபரே இவ்வாறு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளார். கடந்த 23ம் திகதி மாலை குடி வெறியில் வீடிற்கு வந்த இவர் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
வாய்த்தர்க்கம் முற்றியதில் அவர் மீது பெற்றோலை ஊற்றிய மனைவி தீ வைத்துள்ளார்.
படுகாயமடைந்த அவரை அயலவர்கள் மீட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். கடுமையான தீக் காயங்களுக்குள்ளான இவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்துள்ளார். இறப்பதற்கு முன்னர் இவர் வழங்கிய வாக்குமூலத்தில் மனைவியே தன்னை பெட்ரோல் ஊற்றித் தீ வைத்ததாக தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து ராகினி என்ற அவரது மனைவியை கைது செய்த வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





