இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 48.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பில் பிரியஞ்சன் 74 ஓட்டங்களையும் குமார் சங்கக்கார 51 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் பாகிஸ்தான் சார்பில் உமல் குல் 3 விக்கெட்களையும் சயிட் அஜ்மல் 4 விக்கெட்களையும் ஜுனைட் கான் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 41.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 226 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியுள்ளது.
ஐந்து ஒருநாள் சர்வதேச போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் பாகிஸ்தான் அணி 3-1 என முன்னிலையில் உள்ளது.





