அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் சட்டங்கள் அறிமுகம்!!

754

Fishஅத்து மீறி மீன்பிடியில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இந்த சட்டங்கள் அமுல்படுத்தப்பட உள்ளன.

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இலங்கை மீனவர்களின் படகுகளுக்கான அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்பட உள்ளது.
புதிய சட்டத்தின் அடிப்படையில் படகு உரிமையாளருக்கு 15 லட்ச ரூபா அபராதம் விதிக்கப்பட உள்ளது.

படகில் பயணிக்கும் மீனவர்களுக்கு நாட்டின் சாதாரண சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 227 இலங்கையர்கள் இந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை அத்து மீறல்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக 267 இந்திய மீனவர்கள் இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நீண்ட காலமாக நிலவி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையில் அடுத்த மாதம் விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.